தூத்துக்குடி மாவட்ட அளவில் ஊரகத் திறனாய்வு தேர்வில் வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றனர்.
தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஊரகத் திறனாய்வு தேர்வில் வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்விலும் இப்பள்ளி மாணவர்களே முதலிடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய திறனாய்வு தேர்வு ஊடகத் திறனாய்வு தேர்வு தமிழ் திறனறிவு தேர்வு ஆகிய பல்வேறு போட்டி தேர்வுகளில் முதலிடம் பெற்று வருகின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஹரிகரன், துரைமுருகன், காளிஸ்வரன், டேனிக்காமார்ஷலின், சகாயரெஜிலா, மாதவி, சீதலாதேவி, அன்றன்சகாயரொனிஷா, பிரதீபா, சகாயபியூலா , ஜெப பிரசன்னா, கன்னிமரியரோஜா ஆகிய 12 மாணவர்களும் ஊரகத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.. வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி , உதவி தலைமை ஆசிரியர்கள் மந்திரமூர்த்தி, மாணிக்க ராஜ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு, ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்


