ஏரல் அருகே சிவகளை பெருங்குளத்தில் நேற்று மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கணக்கெடுப்பு நடைபெற்றது .இந்த கணக்கெடுப்பில் மாவட்ட வனத்துறையும் சிவகளை காடு போதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பும் சிவகளை தொல்லியல் கழகமும் .தூத்துக்குடி மாவட்ட அறிவியல் கழகமும் தூத்துக்குடி பேர்ல் சிட்டி அமைப்பும் நீம் பவுண்டேசன் அமைப்பும் கலந்துகொண்டன. சிவகளை பெரும் குளத்தின் வடக்கு பகுதியில் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவகளை உச்சம் பறம்பின் மேற்குப்பகுதியில் இரும்பு காலத்தைச் சேர்ந்த இரும்பு தொழிற்சாலையின் இரும்புக் கழிவுகளை சிவகளை ஆசிரியர் மாணிக்கம் கண்டுபிடித்தார். மேலும் அபபகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு செய்த சிவகளை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அது பற்றி விளக்கினார். சிவகளை உச்சம் பறம்பின் மேற்கு பகுதியில் இந்த இரும்பு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொருநை நதிக்கரை நாகரீகத்தில் மூன்று முக்கிய பகுதிகளான சிவகளை ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளில் தற்பொழுது அகழாய்வு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இரும்புக் காலத்தைச் சார்ந்தவைகளாக உள்ளன. இந்த அகழாய்வில் இரும்பினால் செய்யப்பட்ட வாள் கத்தி உளி போன்ற இரும்பு பொருட்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.இரும்பு ஆயுதங்கள் செய்வதற்கான இரும்பு தாதுக்கள் இப்பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதிகளில் தொல்பழங்கால மக்கள் இரும்பு தொழிற்சாலைகள் ஆங்காங்கு அமைத்திருந்தற்கான தடயங்கள் அதிகம் காணப்படுகின்றன.அதற்கு ஆதாரமாக ஆங்காங்கே இரும்புக் கழிவுகள் தொல்லியல் களங்களில் மேற்பரப்புக்கு வெளியே காணப்படுகின்றன. மக்கள் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியதால் அக்காலம் இரும்பு காலம் என்று அழைக்கப்பட்டது.தற்பொழுது சிவகளை யில் மூன்றாவது கட்டஅகழாய்வு நடைபெற உள்ள நிலையில் சிவகளையின் வடக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரும்பு கழிவுகள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது போல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவகளையின் மேற்கே ஸ்ரீமூலக்கரையில் சிவகளை ஆசிரியர் மாணிக்கம் இரும் பு கழிவுகளையும் கல்வட்டங்களையும் கண்டு பிடித்திருந்தார். அங்கு கடந்த ஆண்டு தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தனர்.இந்த கள ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட அறிவியல் கழக தலைவர் முத்துசாமி செயலாளர் சம்பத் சாமுவேல் நீம் பவுண்டேஷன் உறுப்பினர் லூயிஸ் பேர்ல் சிட்டி உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.மேலும் இப்பகுதியையும் அகழாய்வு செய்யவேண்டுமென சிவகளை ஆசிரியர் மாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.