தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.52.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அந்தோணி ராஜலின் (50) என்பவர் விபத்துக் காப்பீடு செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அந்தோனி ராஜலின் குடும்பத்துக்கு விபத்துக் காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மதுரை மண்டல தலைவர் வினோத்பால் அவர்கள் அந்தோனி ராஜலின் குடும்பத்தினருக்கு ரூ.52.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதில் மூத்த பகுதி மேலாளர் சங்கர், மதுரை மண்டல கிளைம் ஒருங்கிணைப்பு அதிகாரி பழனிவேல் மண்டல பயிற்சி மேலாளர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி கிளை மேலாளர் ரமேஷ் சுப்பையா, மூத்த விற்பனை மேலாளர் தினேஷ், மூத்த முகவர் செல்வசேகரன் மற்றும் தூத்துக்குடி கிளை விற்பனை மேலாளர்கள் முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


