சாத்தான்குளம் அருகே சட்ட விரோதமாக பனை கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் சட்ட விரோதமாக பனை கள் விற்பனை செய்யப்படுவதாக தகவலின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர், ஜோசப் கிங் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரி காட்டு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பனை கள் வைத்திருந்ததாக அதே ஊரைச் சேர்ந்த பனை தொழிலாளி ராம்ராஜ் (45) என்பவரை கைது செய்து அவர் வைத்திருந்த பனை கள்ளை பறிமுதல் செய்துள்ளனர்.


