சாத்தான்குளம் அருகே காரில் மதுபானங்களை கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் சுடலை கோயில் அருகில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் 144 எண்ணம் கொண்டு மதுபாட்டில் பெட்டி 3 இருந்தது தெரியவந்தது.
உடன் போலீசார் விசாரணை நடத்தியதில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம் புதூர் இந்திரா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் சுடலை (34) எனரும், அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. உடன் போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


