தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கவுன்சிலர் சந்திரபோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் / பணி நியமனக்குழு உறுப்பினர் சந்திரபோஸ் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “வார்டு எண் 34 பகுதிகளான தபால் தந்தி காலனி, அசோக் நகர், ராஜீவ் நகர், 3வது மைல் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது.
அங்குள்ள பூங்காக்களில் சிறிய மழை பெய்தாலே மழைநீர் தேங்கி விடுகிறது. எனவே சாலைகளை சீரமைக்கவும், பூங்காக்ககள், நூலகங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.