திருச்செந்தூர் பகுதிகளில் நாளை (நவ.14) வியாழக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்செந்தூா் மின்விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு “திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் நாளை (நவ.14) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆகவே, புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி , காந்திபுரம், கிருஷ்ணா நகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் – காயல்பட்டணம் ரோடு. பிடிஆா் நகா், பாளை ரோடு, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம்,
வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, குரங்கணி, குளத்துக்குடியிருப்பு, மயிலோடை, கோட்டூா், குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.