தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதன்கிழமை தோறும் மண்டலம் வாரியாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது.
இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் சுப்பையா, மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.கனகராஜ், சந்திரபோஸ், விஜயலட்சுமி, பொன்னப்பன், ராமர், கந்தசாமி, ஸ்ரீனிவாசன்(எ)ஜாண், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.