சாத்தான்குளம் அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் பகுதியில் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக மணல் திருட்டு நடப்பதாக கிடைத் தகவலின் பேரில், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் சாத்தான்குளம் எஸ்.ஐ எபனேசர், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் உள்ளிட்டோர் அப்பகுதியில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது வந்த டிராக்டரை மறித்து சோதனை நடத்தினர். அதில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கொண்டு வந்த தெரியவந்தது. உடன் டிராக்டரை பறிமுதல் செய்து தட்டார்மடம் போலீசில் ஒப்படைத்தனர். தட்டார்மடம் போலீசார் வழக்குபதிந்து திசையன்விளை அருகே உள்ள கிரைக்காரன் தட்டைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் பூபதி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


