தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு ஆடுகளம் செயலி TN Sports (Adukalam App) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு வீரர்கள், விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு செயலியான TNSPORTS ஆடுகளம் பதிவேற்றம் செய்து பயன்படுத்திட வேண்டும்.
இந்த செயலியினை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்களின் இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களை குறிப்பிட்டு பதிவேற்ற வேண்டும். இனி வருங்காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும்Digi Locker மூலம் வழங்கப்பட உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக TN SPORTS ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன் பெறுமாறு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டி.வி.பேட்ரிக் தெரிவித்தார்.


