கிளாக்குளம் வெங்கிடாசலபதி திருக்கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. நாடு செழிக்கவும், நன்மைகள் பெருகவும் இந்த பூஜையை மக்கள் நடத்தினார்கள். பூஜையை ஏகல் வித்தியாலயா பொறுப்பாளர் சாந்த குமாரி துவக்கிவைத்தார். ஊர் பிரமுகர்கள் சக்திவேல், பண்டாரம், ஜெய்சங்கர், அன்பு ரகுபதி , கருங்குளம் பொறுப்பாளர்கள் கல்யாணி, ராமலெட்சுமி, பிரமோ, மேகலா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஏகல் வித்தியாலயா ஆச்சாரியா அமலி தலைமையில் கருங்குளம் ஏகல் அபியான் சார்பில் செய்திருந்தனர்.


