கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு 4பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து ஏழு ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர்கள் சண்முகம், செல்லத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த மேற்படி தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


