சிவகளை குளத்துக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, பெருங்குளம் மற்றும் ஆறுமுகமங்கலம் குளக்கரைகளில் பறவைகள் கணக்கெடுப்பு மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை பேர்ல்சிட்டி, சிவகளை காடுபோதல், தூத்துக்குடி மாவட்ட அறிவியல் கழகம் மற்றும் சிவகளை தொல்லியல் கழகத்தின் உறுப்பினர்கள், நீம் பவுண்டேசன் அமைப்புகள் கொண்டு கணக்கெடுப்பில் ஈடுபட்டன.
இன்று இந்த கணக்கெடுப்பு பணியானது சிவகளையில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் பேர்ல் சிட்டி அமைப்பின் மதிபாலன், தூத்துக்குடி மாவட்ட அறிவியல் கழக தலைவர் ஆசிரியர்கள் முத்துசாமி, செயலாளர் சம்பந் சாமுவேல் சிவகளை காடுபோதல் அமைப்பைச் சேர்ந்த சிவகளை ஆசிரியர் மாணிக்கம், ஏரல் வன அலுவலர் பழனி மற்றும் கோபிநாத் நீம் பவுண்டேசனை சேர்ந்த லூயீஸ் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த பகுதிகளை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பறவைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.