தூத்துக்குடி புனித அலாய்சிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி புனித அலாய்சிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியை அந்தோணி சகாய வசந்தி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை மரிய லூசியாள் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் பபிளா தொடக்க ஜெபம் செய்தார். இதில், ஆசிரியர்கள், மாணவியர் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பொங்கல் பண்டிகை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகள் பொங்கல் பண்டிகை குறித்த பாடல் பாடினர்.
முன்னதாக பொங்கல் பண்டிகையையொட்டி மாணவிகளுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக ஆசிரியைகள் ஜெனிபர், ஜெனோ பியா, சீனி, ஜுடி, மோனிகா, கெயிட்டி, பாஸ்கா பிரியதர்ஷினி, லில்லி, ஹேமா, அனிதெரஸ் ஆகியோர் செயல்பட்டு மாணவிகள் வரைந்த கோலங்களுக்கு மதிப்பெண் வழங்கினர். போட்டிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, வகுப்பு வாரியாக நடைபெற்றது.
போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, பொங்கல் பண்டிகையை குறிப்பிடும் வகையில் கரும்புடன் பொங்கல் பானை, ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு வகையான கோலமிட்டு அசத்தினர். பொங்கல் விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் வனிதா, ஜெயந்தி, பமேலா, சந்திரி, பானு, மரிட்டா கொரேரா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.


