தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நாசரேத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நாசரேத் பிரகாசபுரம் கிளை மேலாளர் விக்னேஷ்வரன், 15 கம்ப்யூட்டர்களை பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்கினார்.
இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளிகளின் தாளாளர் ரமா, கல்லூரி பர்சார் தனபால், பேராசிரியர்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோசம் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


