பள்ளி இடைநிறுத்த குழந்தையை மதர் சமூக சேவை நிறுவனத்தினரின் முயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்
தமிழ்நாட்டில் இளம் குற்ற சிறார்கள் எண்ணிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது இடத்தை வகுத்து வருகிறது.குற்ற சிறார்களின் பின்னணியை பார்த்தால் பள்ளி இடைநிறுத்த குழந்தைகளே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு செயலில் ஈடுபட்டு குற்ற சிறார்களாக மாறி வருகிறார்கள்.
குற்ற சிறார்கள் எண்ணிக்கையை தடுப்பதற்காக தொடர்ந்து மதர் சமூக சேவை நிறுவனம் பள்ளிச் செல்லா, பள்ளி இடைநிறுத்த குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் தாலுகா குலசேகரப்பட்டிம் காமராஜர் நகரை சேர்ந்த சுடலைமுத்து என்பவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் , 2 மகன் பேச்சிவிஜய் (வயது 13) குலசேகரபட்டினம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.தன் தாய் தந்தை பெயரை நெஞ்சில் பச்சை குத்தி இருந்தால் இதை சக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளான் கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று தனது சைக்கிளில் செல்லும்போது பக்கத்து தெருவை சேர்ந்த மணிகண்ட பெருமாள் வளர்த்து வந்த நாய்க்குட்டியின் வாலில் சைக்கிளை ஏற்றி விட்டதாக தெரிகிறது. இதை கவனிக்காத சிறுவன் பேச்சி விஜய் வீட்டுக்கு சென்று விட்டார். இதை அறிந்த மணிகண்ட பெருமாள் எட்டு பேர் கொண்ட கும்பலுடன் சிறுவன் பேச்சு விஜய் வீட்டிற்கு வந்து பேச்சி விஜய் மற்றும் அவன் தாயாரை தாக்கியுள்ளனர். இதனால் சிறுவன் பேச்சு விஜய் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கலந்து 2 தேதி வீடு திரும்பி உள்ளார்.அதுவரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதை தாமதப்படுத்தி வந்தனர். இந்த தகவல் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதியின் மூலம் சமூக ஆர்வலரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு தெரியவந்தது. இது அறிந்து குலசேகரபட்டினம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து அதிகாரிகள் சந்தித்து நடந்த சம்பவத்தையும் குற்றத்ததையும் எடுத்துக் கூறினார் இதனால் கடந்து 2 தேதி சிறுவன் பேச்சு விஜயை தாக்கிய மணிகண்ட பெருமாள் உட்பட எட்டு பேர் மீது ஏழு பிரிவுகளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதோடு விட்டு விடாமல் சிறுவனை பேச்சு விஜய் குழந்தை தொழிலாளியாகவோ, மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமைப்பட்டு குற்ற சிறராக மாறிவிடக்கூடாது என்பதற்காக சமூக ஆர்வலர் கென்னடி பெற்றோரை அழைத்து கல்வியின் அவசியம் முக்கியத்துவத்தை பற்றி எழுத்து கூறினார். கல்வியின் அவசியத்தை புரிந்து தெரிந்து அறிந்து கொண்ட பெற்றோரும் சிறுவன் பேச்சு விஜய்யை படிக்க வைக்க ஒப்புக்கொண்டனர்.சிறுவனும் படிக்க விரும்புவதாக தெரிவித்தான்.
இதனால் மதர் சமூக சேவை நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி, இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி சிறுவன் பேச்சு விஜய்யை தங்கி படிக்கும் வசதியுடன் கூடிய மெய்ஞானபுரத்தில் உள்ள எஸ்தர் சாந்தம் மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் 9 வகுப்பில் சேர்த்தனர்.
இதில் சிறுவனின் பெற்றோர்கள் சுடலைமுத்து, பொன் செல்வி, பள்ளி ஆசிரியை சசிகலா, எப்சிபா பியூலா,இல்ல காப்பாளர் பால் சமூக வேல்,தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாவட்ட தலைவர் ராஜ்கமல் ஆகியோய் இருந்தனர்
பள்ளியில் சேர்க்கப்பட்ட சிறுவன் தனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் தான் நன்றாக படித்து பிற்காலத்தில் ஒரு காவல்துறை அதிகாரிகள் வருவேன். இன்று விருப்பத்தை தெரிவித்தான். மேலும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி மற்றும் ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதிக்கு ஆழ்ந்த கண்ணீருடன் சிறுவனும் பெற்றோரும் நன்றியை தெரிவித்தனர்.


