தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனை நர்ஸ் மகளுடன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பிரியதர்ஷினி (24) இந்த தம்பதியரின் மகள் நாகலட்சுமி (7). பிரியதர்ஷினி தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி அவர் மகளுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது கணவர் ராஜா, பல இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவி, மகளைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


