நாசரேத் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள வாழையடி கிராமத்தில் குருசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். அதில் ரூ.30ஆயிரம் வரை பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகி ரகுநாதன் (60) என்பவர் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


