தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஆன்மிக நாடகம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பாக தபசு மண்டபத்தில் நடைபெறும் இந்து மக்கள் எழுச்சி ஐந்தாவது நாள் விழாவில் ஆன்மீக வகுப்பு, மாணவ மாணவிகள் பங்குபெற்ற நாடகம், பக்தி பாடல்கள் போட்டி நடைபெற்றது. விழாவில், சிவன் கோவில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கம் எம்.எஸ்.எஸ். கந்தப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சிகளை லயன் சி.ராஜன் தொகுத்து வழங்கினார். மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் எஸ் இசக்கி முத்துக்குமார், விழா கமிட்டி துணைத் தலைவர் ஆதிநாத ஆழ்வார், இந்து முன்னணி துணைத் தலைவர் சிவக்குமார், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். பின்பு பிராதன விநாயகருக்கு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


