சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா 22ஆம்தேதி வரை 13நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாள் மாலை 6.30மணிக்கு செட்டிவிளை பங்குதந்தை அந்தோணி தாஸ் அடிகளார் திருவிழா கொடியேற்றினார். அதனைதொடர்ந்து மறையுரை நடைபெற்றது. திருவிழா நாள்களில் ஒவ்வொரு நாளும் காலை 6மணிக்கு திருப்பலியும், மாலை 6மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
12ஆம் நாளான 21ஆம்தேதி மாலை ஆராதனையும், 13ஆம் நாளான 22ஆம்தேதி காலை 7மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து புனித அந்தோணியார் சப்பரபவனி நடைபெறுகிறது. மாலை திருப்பலியுடன் கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை சுசீலன் தலைமையில் அந்தோணியார் சபை மக்கள் ஊர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


