தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாநகரம், பிரையன்ட் நகர் பகுதிக்கு உட்பட்ட 36 மற்றும் 43வது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டங்களில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் உரையாற்றினார். இதில், உடன் பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் பாலன், மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


