விநாயகர் சதுர்த்தி கொண்டாட கொம்மடிக்கோட்டை பல மாடல்களில் விநாயகர் சிலைகள் தயாராகி உள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ம் தேதி திங்கட்கிழமை நாடெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து ஏழுச்சி நாளாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் 140க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஓன்றரை அடி முதல் 9 அடி வரையிலான சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு குறைந்த விலையில் விநாயகர் சிலை வழங்கப்படுவதற்காக சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசாமி கோயில் வளாகத்தில் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து 10க்கு மேற்பட்ட சிலை வடிக்கும் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த ஓன்றரை மாதங்களாக விநாயகர் சிலை தயார் செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
தற்போது 9அடி முதல், 7அடி, 5, மற்றும் 3அடி சிலைகள் பல வடிவங்களில் தயார் நிலையில் உள்ளது. மேலும் வீடுகளில் வைத்து பிரிதிஷ்டை செய்ய ஓன்றரை அடியுள்ள விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விநாயகர் சிலைகள் மயில், கருடன், சிங்கம், மான் உள்ளிட்ட வாகனத்தில் அமர்ந்துள்ளன போலவும், மேலும் பசு, எலியின் மீது ஆமர்ந்த நிலையிலும், பரமேஸ்வரனை கையில் ஏந்திய நிலை என பல வடிவங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி 18ம்தேதி கொண்டாடப்பட உள்ளதால் சிலைகளை இந்து முன்னணி நிர்வாகிகள் அவர்களது பகுதிக்கு வாகனங்களில் ஏடுத்து செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுகுறித்து மாநில இந்து முன்னணி பொதுச் செயலர் அரசு ராஜா கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி இந்துகளிடம் எழுச்சியையும், கிராம புற இந்துக்கள், பெண்களிடம் இந்து உணர்வை ஏற்படுத்துவதற்காக விழா எடுக்கப்படுகிறது. தற்போது அன்னை தமிழை காக்கவும், ஆன்மீகத்தை வளர்க்கவும் இந்து முன்னணி சார்பில் புத்தகம் வழங்கப்படுகிறது.
விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் விநாயகர் அகவல் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொம்மடிக்கோட்டையில் கடந்த 30 ஆண்டுகளாக சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் அரசின் விதிமுறைகள்படி, எந்த ரசாயமும் கலக்காமல் நீர்களில் கரையும் வகையில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது சுமார் 430 சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இங்கிருந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பயன்படுத்தப்படுவதுடன், நெல்லை மாநகரம், கன்னியாகுமரி, விளாத்திகுளம், வேம்பார், தூத்துக்குடி மாநகரம் பகுதிக்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட எடுத்து செல்லப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு நிர்வாகிகளுக்கு குறைந்த விலையில் சிலைகள் விற்கப்படுகின்றன. இதில் கிடைக்கபெறும் வருவாயை ஏழை, எளியவர்களுக்கும், அனாதை இல்ல குழந்தைகள், ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் வகையில் செலவிடபடுகிறது என்றார்.


