தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி துறைமுகம், இரயில்வே நிலையம், விமான நிலையம், சிப்காட் வளாகம் என பல்வேறு தொழில்சார்ந்த நிறுவனங்களும் நிறைந்த பகுதியாகும். மாநகராட்சியில் விரிவாக்கம் மற்றும கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், பருவமழைக்கு முன்பு முழுமையாக சாலைகள் அமைக்கப்பட வேண்டும். என்ற அடிப்படையில் தமிழக முதலமைச்சரும் சிறப்பு நிதி ஓதுக்கப்பட்டு முழுமையாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓவ்வொரு ஓப்பந்ததாரர்களையும் நல்ல முறையில் சாலை பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
2023க்குள் முழுமையான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாநகராட்சி தனித்துவம் உள்ள இடமாக இருக்கும் அதனை கருத்தில் கொண்டு அனைவரும் பணியாற்றி வருகிறோம். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10-ம் தேதிக்குள் இப்பணிகள் முடிவுறும்.
அதுவரையில் நமது தூத்துக்குடி மாநகராட்சியின் தரத்தை மேம்படுத்துவற்கான இப்பணிகளால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குறுகியகால சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்


