தூத்துக்குடியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியினர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக ஆரோக்கிய ராபின் அசோகன், துணை அமைப்பாளர்களாக செல்வக்குமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், ஆகியோரை தலைமை கழகத்தால் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அமைச்சர் கூறுகையில் “தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விளையாட்டு மேம்பாட்டு அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


