நாட்டார்குளம் ஆர்.சி. பங்குக்கு உள்பட பள்ளி முத்தாலங்குறிச்சி புனித வளன் ஆர்.சி பள்ளி. மிகவும் பழமையான இந்த பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இல்லை. நெல்லையில் நடந்த தமிழக அரசின் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள் என்ற தலைப்பில் இந்தப்பள்ளிக்கு கட்டிடம் கட்டவேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில், தற்போதைய எம்.பியும் தி.மு.க மாநில செய்தி தொடர்பாளருமான கான்ஸ்டன் ரவிந்திரன் மூலம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை பெற்றுக்கொண்ட குழு நடவடிக்கை எடுத்தது. இதன்படி இயற்கை இன்னல்கள் மறு கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு 2025-26 ஆம் திட்டத்தின் கீழ் ரூ37.53 லட்சம் செலவில் பள்ளி கட்டிடம் கட்ட பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பங்குதந்தை மார்டின் குமார் தலைமையில் ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கென்னடி, பி.டி.ஒ சுடலை , ஆறுமுகநயினார், பொறியாளர்கள் மாரியப்பன், முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியை பானுமதி, அட்மா குமார், தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் இசக்கி பாண்டியன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சஞ்சய், மதுபாலா சுடலைமணி, கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


