
ஆழ்வார்திருநகரியில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடந்தது.
வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் இன்று நடந்தது.
இந்த அணிவகுப்பை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த கொடி அணிவகுப்பு ஆழ்வார்திருநகரி மெயின்ரோடு வழியாக தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து காமராஜர் சிலை பகுதியில் நிறைவடைந்தது. இதில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலிசார் உட்பட 70 பேர் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், ஸ்ரீவைகுண்டம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா உள்பட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.