தட்டார்மடம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்தக்குடி மாவட்டம், தட்டார்மடம், அன்னாள் நகரில் செயின்ட் அன்னீஸ் சர்ச் உள்ளது. நேற்று காலை ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆலய நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்தபோது மாதாவுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 2 பவுன் டாலர், ஒரு பவுன் கம்மல் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சர்ச் நிர்வாகி அந்தோணி செல்வம் (60) என்பவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.