நிகழ்வுகள்
1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.
1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன.
1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.
1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.
1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான்.
1818 – சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1819 – கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.
1825 – கிறீக் பழங்குடியினர் ஜோர்ஜியாவில் இருந்த தமது கடைசி நிலங்களை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டு மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர்.
1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.
1855 – மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.
1909 – ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கம் நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் அமைக்கப்பட்டது.
1912 – சீனாவின் கடைசி அரசன் உவான்தொங் முடி துறந்தான்.
1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.
1921 – போல்செவிக் படைகள் சியார்சியா மீது தாக்குதலைத் தொடுத்தன.
1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.
1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.
1935 – ஈலியம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.
1947 – மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது.
1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
1974 – 1970 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார்.
1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.
2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபதான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின. நான்கு ஆண்டுகளின் பின்னர் விசாரணை முடிவடையும் முன்னர் அவர் இறந்தார்.
2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.
2009 – அமெரிக்காவின் கோல்கன் விமானம் நியூயார்க்கில் வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும், தரையில் ஒருவரும் உயிரிழந்தனர்.
2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.
பிறப்புகள்
1768 – இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1835)
1804 – ஹைன்ரிக் லென்ஸ், செருமானிய-இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1865)
1809 – சார்லஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியலாளர், நிலவியலாளர் ரி. 1882)
1809 – ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (இ. 1865)
1814 – ஜென்னி வான் வெசுட்பலென், கார்ல் மார்க்சின் மனைவி (இ. 1881)
1824 – தயானந்த சரசுவதி, ஆரிய சமாசத்தை உருவாக்கிய இந்திய குரு (இ. 1883)
1851 – ஆய்கென் வொன் பொம் போவர்க், ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (இ. 1914)
1922 – உசேன் ஓன், மலேசியாவின் 3வது பிரதமர் (இ. 1990)
1948 – ரே கர்ஸ்வயில், அமெரிக்கக் கணினி அறிவியலாளர்
1967 – என். ரவிகிரண், தென்னிந்திய சித்திரவீணைக் கலைஞர்
1969 – டேரன் அரோனாப்ஸ்கி, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
1986 – ஆரி, தமிழகத் திரைப்பட நடிகர்
1980 – ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ, எசுப்பானிய டென்னிசு வீரர்
இறப்புகள்
1713 – சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1664)
1804 – இம்மானுவேல் கண்ட், செருமானிய மெய்யியலாளர் (பி. 1724)
1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)
1912 – கெரார்டு ஆன்சன், நோர்வே மருத்துவர் (பி. 1841)
1916 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானிய கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1831)
1964 – சாம். அ. சபாபதி, இலங்கை வழக்கறிஞர், 1-வது யாழ்ப்பாண முதல்வர் (பி. 1898)
1988 – எஸ். நடராஜா, இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர்
2009 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்
2009 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (பி. 1982)
2013 – சங்கரலிங்கம் ஜெகந்நாதன், காந்தியவாதி, இந்திய விடுதலைப்போராட்ட வீரர் (பி. 1914)
2015 – நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், மலேசிய அரசியல்வாதி (பி. 1931)