தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சிக்னல்களை துண்டிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பொது மக்களுக்கு மிக குறைந்த மாத சந்தா தொகையில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் ஒளிபரப்பி வருவதை தடுக்கும் நோக்கிலும், சில தனியார் கேபிள் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், அரசு கேபிள் டிவி சிக்னல் முத்தையாபுரம், பழையகாயல் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் சில தனியார் நிறுவனங்களால் அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்கள்.


