ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை துவக்க வந்த கனிமொழி எம்.பியிடம் அவரது சிறுவயது புகைப்படத்தினை கொடுத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி கரை தொல்லியல் வளர்ச்சிக்காக மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். தற்போது இவரது வழக்கில் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தந்து விட்டது. தற்போது இந்தியாவிலேயே உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் முதல் முதலில் அமைக்கும் பணிக்காக அகழாய்வு செய்யும் பணி துவங்கியது. இந்த பணியை துவக்கி வைக்க கனிமொழி எம்.பி ஆதிச்சநல்லூர் வருகை தந்தார். அவருக்கு கனிமொழி அவர்கள் சிறுமியாக இருந்த போது (சுமார் 45 வருடங்களுககு முன்பு) கிருஷ்ணாபுரம் கலை கோயிலுக்கு சிற்பங்களை கான தனது தந்தை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, தாயார் ராஜத்தியம்மாள் அவர்களோடு வருகை தந்த புகைப்படத்தினை நினைவு பரிசாக கொடுத்தார். அதை கண்ட கனி மொழி எம்.பி அவர்கள் ஆர்வத்துடன் அந்த படத்தினை பார்த்து ரசித்தார். அப்போது மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ், தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் உள்பட பலர் இருந்தனர்.