
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி நடந்து வரும் தொல்லியல் களத்துக்கு முன்னாள் அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் தீடீர் விசிட் செய்தார்.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணி இன்று காலை துவங்கியது. இந்த பணியை திருச்சி தொல்லியல் துறை மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் துறையினர் செய்து வருகின்றனர். இந்த இடத்துக்கு இன்று மதியம் 2 மணி அளவில் தீடீர் என ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை திருச்சி தொல்லியல் துறை மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அவர் தொல்லியல் நடைபெறும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அவருக்கு சென்னை பல்கலைகழக தொல்லியல் துறை பேராசிரியர் சேரன் விளக்கம் அளித்தார். அதை அவர் கேட்டறிந்தார். ஆதிச்சநல்லூர் பொருநை தொல்லியல் கழகம் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்துக்கு கூடுதலாக பணம் ஓதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஆதிச்சநல்லூர் பொருநை தொல்லியல் கழகம் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், தொல்லியல் பொறியாளர் கலை செல்வன், தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார், முத்துகுமார், தொல்லியல் பராமரிப்பாளர் சங்கர், நில அளவையர் குப்புசாமி, வரைவாளர் இராகவேந்திரா, விக்னேஷ், பாரதீய ஜனதாகட்சியை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் ராஜா, செய்துங்கநல்லூர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.