ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை துவக்க வந்த கனிமொழி எம்.பியிடம் செய்துங்கநல்லூர் வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது.
செய்துங்கநல்லூரில் கடந்த 57 வருடகாலமாக அரசு நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. தற்போது இந்த நூலக கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் மழை நேரத்தில் ஒழுகும் நிலையில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கடிதத்தினை வாங்கி கொண்ட கனிமொழி எம்.பி ஆவண செய்வதாக வாக்களித்தார். மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் அவர்களிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். அப்போது நூலகர் லெட்சுமண குமார், வாசகர் வட்ட துணைத்தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, வாசகர் வட்ட உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


