செய்துங்கநல்லூரில் உள்ள பலசரக்கு, பெட்டிக் கடைகளில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சிறப்பு தீடீர் சோதனை முகாம் நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யதவர்களுக்கு ரூ 2 ஆயிரம் அபாதாரம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் தூத்துக்குடி பொது சுகாதாரத்துறை நலக்கல்வியாளர் பாலசுப்பிரமணியன், கருங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ஜாகிர், திருவைகுண்டத்தான், முத்துக்குமார், அருணாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் மாவட்ட பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கீதாராணி தலைமையில் நடந்தது.
தொடர்பானவை
October 4, 2024