கருங்குளத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. கருங்குளம் 6 வது வார்டு செயலாளர் உடையார் தலைமை வகித்தார். 4 வது வார்டு செயலாளர் ரா. சின்னத்துரை முன்னிலை வகித்தார். சே. பண்டாரம் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். சின்னத்துரை, திமுக வர்த்தக அணி செயலாளர் சாதிக், ராமசுப்பு, சுப்பிரமணியன், மகராஜன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


