செய்துங்கநல்லூரில் ரம்ஜான் பண்டிகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசல் திடலில் வைத்து நோன்பு பெருநாள் சிறப்புத் தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் அப்துல் சமது தொழுகையை நடத்தினார். தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கபூர் மிஸ்பாஜி பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். 300க்கும்மேற்பட்ட பெண்களும் 200க்கு மேற்பட் ஆண்களும் கலந்துகொண்டனர் . 105 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் சாதிக், துணை தலைவர் வாசிம், துணை செயலாளர் கரீம் பாஷா, பொருளாளர் அப்துல் கனி, அப்துல் காதர், ஜாபர், வஸில்லா சுஹைல், அல்தாப், ஆவின் காதர், ஆபித் , சாலி, மஸ்தான், ஹனிபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


