தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் என்று வாலிபர சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெ.நேசமணி, மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மிகவும் அசுத்தமாகவும் அதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இந்த மழை நீர் வடிகாலை சுத்தம் செய்து மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இன்னும் சில மாதங்களில் மழை பெய்யும் நிலையில் இது போல் உள்ள கால்வாய்களை அரசு அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


