கோவில்பட்டியில் மாநில அளவிலான இளையோர் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, கோவில்பட்டி ரோட்டரி சங்கம், தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் மாநில அளவிலான இளையோர் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது
கோவையில் நடைபெறவுள்ள இளையோர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டிற்கு முன்னோட்டமாக இம் மாநில அளவிலான கருத்தரங்கு கோவில்பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாகக் கல்லூரி வளாகத்தில் 60 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இக் கருத்தரங்கிற்குத் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன், செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநிலப் பொதுச் செயலாளர் மனோகர் மற்றும் மாநில அளவிலான கருத்தாளர்கள் கலந்துகொண்டு, மாணவர்களிடையே வானவியல், விண்வெளி அறிவியல் குறித்து விரிவாகப் பேசினர்.
மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்ட அஸ்ட்ரோ கிளப்களுக்கான அஸ்ட்ரோ விருதுகளை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு வழங்கிப் பாராட்டினார். இப்போட்டிகளில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வம், சீனிவாசன், கண்ணன், ராஜ்குமார், ரவிமாணிக்கம், கிருஷ்ணசாமி, மணிகண்டன், மாரியப்பன், சுப்பிரமணியன், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் சாந்தி நன்றியுரை ஆற்றினார்.


