தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாகச் ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள்விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப் போட்டிகள் 14.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்குத் தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் இப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு 9159668240, 9842553496 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
போட்டித் தலைப்புகள்:
கட்டுரைப் போட்டித் தலைப்பு: ‘தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை’
பேச்சுப் போட்டித் தலைப்புகள்: 1. நான் விரும்பும் தமிழ்நாடு, 2. அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு, 3. இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு, 4. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, 5. வீரம் செறிந்த தமிழ்நாடு.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் அனைவரும் இப்போட்டிகளில் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.


