சுதந்திர போராட்டத்தில் முடிவைத்தானேந்தல்
– முனைவர், க.கந்தசுப்பு முடிவைத்தானேந்தல்
தூத்துக்குடி மாவட்டம் என்பது பல்வேறு வகைகளில் தனிச்சிறப்பு பெற்ற மாவட்டமாகும். தமிழ்க்கலை, இலக்கிய, பண்பாட்டுத் துறையிலும், இந்திய நாட்டின் விடுதலை போராட்ட இயக்கத்திலும் வரலாறில் முத்திரைகளைப் பதித்த மாவட்டமாகும்
இம்மாவட்டம் ஆரம்பத்தில் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டதில் இருந்து 1986ம் ஆண்டு து£த்துக்குடி மாவட்டம் உருவானது. இங்கு ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, செவத்தியா, சிவ.சுப்பிரமணியன் (தானாதிபதி பிள்ளை), சுந்தரலிங்கம், அழகுமுத்துகோன், ஒண்டிவீரன் போன்ற போராட்ட தலைவர்களை தன்னகத்தை கொணடு உள்ள மாவட்டம் ஆகும்.
தமிழகத்தில் சுதேசிய உணர்வுக்கு வித்திட்டு அதற்காக அற்புதத் தியாகங்கள்பல புரிந்து ஆங்கிலேயர் எதிர்த்து வங்ககடலில் கப்பல் விட்ட தியாக செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனார் மற்றும் எட்டையாபுரத்து கவிஞர் தனது பாடல்கள் முலம் சுதந்திர தாகத்தை எங்கும் பரவச் செய்த முண்டாசு கவிஞர் பாரதியார் பிறந்த மாவட்டம் இம்மாவட்டம்.
இதை போன்று மாவட்டதிற்கு மற்றும் ஒரு பெருமை சேர்க்கும் கிராமம் முடிவைதானேந்தல் கிராமம் ஆகும். இக்கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள சுமார் 14 கிராமங்களில் இந்து நன்குடி வெள்ளாளர் மக்கள் வாழ்ந்த வருகின்றனர். அவர்கள் மன்னர் ஆட்சி காலம் முதல் கொண்டே குருநில மன்னராகவும் மற்றும் அரசு பணியிலும் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வூரில் பெரும்பாலும் இளைஞர்
கள் இராணுவம், காவல்துறை, எல்லை பாதுகாப்புபடை தொழில் பாதுகாப்புப்படை, என அனைத்து படை பிரிவுகளிலும் தங்களது முத்திரையை பதித்து வருகின்றனர். 1939&1945 வரை நடைபெற்ற இரண்டாம் மகாயுத்தத்தில் முடிவைத்தானேந்தல் கிராமத்திலிருந்து 750 நபர்கள் யுத்த சேவை புரிந்தார்கள். அவர்களின் 11 வீரமரணம் அடைந்தார்கள். இம்மக்களின் இந்திய இந்திய சுதந்திர போராட்டதிதில் பங்கு கொண்ட வீரர்களை பற்றிய தகவல்களை வெளி கொண்டு வருவதே இந்த ஆய்வு கட்டுரையின் நோக்கமாகும்.
முத்துபட்டவராயன். (பிறப்பு&1914)
து£த்துக்குடி தாலுகா, முடிவைதானேந்தல் கிராமத்தில் நிலச்சுவான்தார் சங்கரலிங்கம் பிள்ளைக்கும் பேச்சியம்மாளுக்கும் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் பொழுதே விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் உடையவராய் விளங்கினார். மாணவர்களையும், ஆசிரியரையும் கதர் குல்லாய் அணியும்படிச் செய்து போலிசாரின் விசாரணைக்குள்ளானார். கதர் அணியக் கூடாதென்றுத் தடுத்த தகப்பனாரை எதிர்த்து கதர் அணிந்ததனால் அவர் து£க்கு போட்டு கொண்டு தற்கொலை பண்ண முயற்சி செய்தார். பள்ளிக்கூட மேனேஜராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கூடம் ஒன்று கட்டியுள்ளார். பல கிராமங்களில் காந்தி மன்றம், காங்கிரஸ் கமிட்டிக்கள் அமைத்தார். 1934 ல் காந்தியின் நல்லாசியையும் பெற்றார். 1937 ல் இவருடைய முயற்சியால் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. ஜில்லா போர்டு தேர்தலில் உறவினர்களையும் செல்வந்தர்களையும் எதிர்த்துப் போட்டியிட்டார். அச்சமயத்தில் இவர்மீது ஜாமீன் கேஸ் நடைபெற்றது. 1942 விடுதலைப் போராட்டத்தில் நண்பர்களையும் ஈடுபடுத்தினார். அக்டோபர் 2 ல் காந்தி ஜெயந்தி கொண்டாடி விட்டு, அரசாங்க அதிகாரிகளையும் போலிஸாரையும் ராஜினாமா செய்யக் கோரி நேரில் வேண்டவே போலிஸாரால் கைதி செய்யப் பெற்று 500 ரூபாய் அபராதமும், பெல்லாரி&அலிப்புரம் சிறையில் ஒரு வருடம் தண்டனையும் அனுபவித்தார். இந்நேரத்தில் இவரது முதல் மனைவி இறந்து விட்டார். அதன் பின்பு திருச்செந்து£ரில் தன் இரண்டாவது மனைவியுடனும் ஒரே மகனான வள்ளிமுத்துக் குமாரசுவாமியுடனும் திருச்செந்து£ரில் வசித்தார். தியாகிகளுக்கான அரசு பென்ஷன் ரூ 200. ம் ஆசிரியர் பென்ஷன் ரூ. 129 ம் பெற்று வந்தார்.
ஐயம் பெருமாள் பிள்ளை
1911 ல் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் பிறந்தார். 1925 முதல் 1956 வரை அக்கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்பொழுது காந்திஜியின் அரிஜன இயக்கப் பணியில் ஈடுபட்டார். மாணவர்களுடன் சென்று கட்டப்பொம்மன் நாட்டுப் பாடல்களைப் பாடி அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். 1934-36 தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு பள்ளிக்கூடத்தில் பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் அரிஜனங்களுக்கும் தனி பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்ததை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்–. அரிஜனங்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்பதற்காக மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். புளிய விழாரினால் ஊராரால் அடிக்கப்பட்டார். 1936 ல் தன் நிலத்தை விற்று விட்டு கிராமத்தை விட்டு வேளியேறினார். 1937 ல் வார்தா ஆகி 6 மாதம் தங்கினார். அப்பொழுது அவுனார் ஆற்றங்கரையில் அமைந்திருந்த வினோபாபா ஆசிரமம் சென்று அவருக்கு தமிழ் கற்றுகக்கொடுத்தார். 1937 இறுதியில் நாகபுரி சென்று சிலகாலம் தமிழர் காலனியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கையில் பணமில்லாததால் கால்நடையாகவே 1938 ல் தமிழகம் திரும்பினார். நோய்வாய்பட்ட நிலையில் விழுப்புரத்தில் தங்கி காங்கிரஸ் தலைவர்களோடு தொடர்பு கொண்டார். பூந்தோட்டம் வட்டாரத்தில் காந்தி ஆஸ்ரமம் அமைத்து மீண்டும் அரிஜனத் தொடர்பு ஈடுபடலானார். அப்போது காந்தி உயர்நிலைப் பள்ளியில் வார்தா கல்வி முறைப்படி பயிற்சி அளிக்கும் ஆசிரியரானார். 1940 சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கடலு£ர் வேலு£ர் சிறையில் 6 மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார்-. 1941 ல் வேலு£ர் சிறையில் காமராஜரோடு சில நாள் இருந்தார். 1942 ல் கம்யூனிஸ்ட் உறுப்பினரானார். 1943 ல் புதுவை கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். புதுவை மாநில புரட்சியில் ஈடுபட்டு 1948 ல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் கடத்தப்பட்டார். புதுவை அருகிலுள்ள கோட்டைக்குப் பக்கத்தில் தங்கி 1969 ஆசிரியராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிககத்தககது.
பேச்சிமுத்துப் பிள்ளை
1921 ல் முடிவைத்தானேந்தலில் பிறந்தார். வயது 55 1956 ல் காங்கிரஸ் தொண்டர்படை அமைத்து 1937 வரை காரியதரிசியாகப் பணியாற்றினார். 1937 ல் நடைபெற்ற ஜில்லாபோர்டு தேர்தலில் காங்கிரசுக்காக உழைத்தார். ஜஸ்டிஸ் கட்சியினரால் மிகவும் மோசமாகத் தாக்கப் பட்டார். 1942 ல் புது£ரில் ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டே புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டார். 19.08.1942 இரவு திருநெல்வேலி & து£த்துககுடி ரஸ்தாவிலுள்ள தந்திக்கம்பிகளை அறுக்கும் பணியில் ஈடுபட்டு கைதாகி சொல்லொண்ணா கொடுமைக்கு ஆளானார். ஸ்ரீவைகுண்டம், து£த்துக்குடி, திருச்செந்து£ர், கொக்கிரகுளம் சப்&ஜெயில்களிலும் திருச்சி மத்திய சிறையிலுமாக 6 மாதங்கள் 13 நாட்கள் தண்டனை அனுபவித்தார். சிறையில் ஒழுங்கான முறையில் உணவு வழங்கப்படாததைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்து போலிஸாரின் தடியடிக்குள்ளானார். திருச்சி சிறையில் காந்திஜி வரலாறு பற்றிய வில்லுப்பாட்டு நடத்தி வார்டர்களால் அவதியுற்றார். இவருக்கு 3 பெண்கள் உள்ளனர். மனைவி சுப்பம்மாள் நிலமான்யம் பெற்றுள்ளார். அரசின் உதவித் தொகை பெறவில்லை.


