சாத்தான்குளம் அருகே கழிவு நீர் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் தாய், மகன் தாக்கப்பட்டது தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 14பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி சந்திரா (39). இவர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் கழிவுநீர் செல்ல குழி தோண்டியுள்ளார். இதனால் அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைகண்ணு (60) என்பவருக்கும் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வெள்ளைகண்ணு, அவரது மகன்கள் மாரி, சுந்தர், சுதன், இசக்கி, மற்றும் உறவினர் மணி ஆகியோர் சந்திராவை தாக்கினார்களாம். இதை தட்டிக்கேட்ட அவரது மகன் லட்சுமணனையும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல் செட்டிக்குளத்தைச் சேர்ந்த முருகன் (52) அவரது பெரியப்பா மகன் வெள்ளைகண்ணு வீட்டில் இருந்தபோது சந்திராவுக்கும், வெள்ளைக்கண்ணுவுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கெட்டியம்மாள் புரத்தைச் சேர்ந்த மாரி உள்ளிட்ட 7பேர்கள் கத்தி அரிவாளை கொண்டு கேட்டை உடைத்துள்ளனர். இதனை முருகன் செல்பேசியில் படம் எடுத்துள்ளார். இதனால் 8பேர்களும் ஆயுதங்களை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று விட்டனராம்.
இதுகுறித்து சந்திரா மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ரத்தினராஜ் விசாரணை நடத்தி சந்திரா புகாரின்பேரில் வெள்ளைக்கண்ணு உள்ளிட்ட 6பேர்கள் மீதும், முருகன் புகாரின் பேரில் மாரி உள்ளிட்ட 8பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.


