தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதியுதவியுடன் மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் ஆழ்வார்திருநகரி பராங்குச திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆழ்வார்திருநகரி காவல் உதவி ஆய்வாளர் செல்வன் தலைமை வைத்து குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் ரூபேஷ் தலைமையில் மருத்துவர்கள் முகாமில் சிகிச்சைகள் மேற்கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சாரியார், தன்னார்வத் தொண்டர் முத்துராஜ், பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், பிரேமா, ஆறுமுக வடிவு, தன்னார்வ தொண்டர் விஜயகுமார், மைய தலைவர் ரேச்சல், லட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தன்னார்வத் தொண்டர் செல்வன் துறை நன்றி கூறினார். இந்த முகாமில் 57 பேர் கலந்து கொண்டனர் இதில் பதினைந்து பயனாளிகள் அடுத்த சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


