தூத்துக்குடி சிவன் கோவிலில் கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று கார்த்திகை 4வது சோம வாரத்தையொட்டி தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் சோம வாரத்தையொட்டி ஸ்ரீவிநாயகா பூஜை, மூல மந்திர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
மாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4 மணிக்கு சுவாமிக்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயாரட்சை தீபாராதணை நடக்கிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


