தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல குறைதீர்க்கும் முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு இன்று அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். பின்னர் மேயர் பேசும் போது, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பொதுமக்கள் மாநகராட்சி கால்வாய்களில் குப்பைகள், பாலித்தீன் பைகளை கொட்டக்கூடாது என்றார்.
இந்நிகழ்ச்சியில் காலி மணைகளுக்கு வரிவிதிப்பு, சொத்து பெயர் மாற்றம், புதிய வரி உட்பட வருவாய்துறை சார்பான 16 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் நசரேன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் அந்தோணி மார்ஷலின், தனலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


