திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2001-ம் ஆண்டு படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2001-ம் ஆண்டு படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பழைய மாணவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கல்லூரி காலத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்தனர். இதில் பலர் காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.


