கருங்குளம் யூனியனில் மானாவாரி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் 2020-&21 திட்டத்தின் மூலம் பயறு வகை பயிர்களுக்கான விதைகளை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் வழங்கினார்.
கருங்குளம் யூனியனில் மானாவாரியில் தெய்வச்செயல்புரம், பூவாணி, செக்காரக்குடி, வடக்குகாரசேரி ஆகிய கிராமங்களில் பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் 2020&-21 திட்டத்தின் கீழ் விவசாயிகள் சேர்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்ட பணியாக கருங்குளம் வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் பயிறு வகை பயிர்களுக்கான விதைகளை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் வழங்கினார். தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) பழனி வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கி தங்கம், துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வசுந்தரம், திருவேணி, இளநிலை வேளாண்மை ஆராய்ச்சியாளர் சிந்தியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


