தூத்துக்குடி மாவட்டத்தில் 6 போலீஸ் சப் இஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி ரூரல் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் பதவி உயர்வு பெற்று விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் சங்கர், தேனி மாவட்டம் தேவநாதன்பட்டி இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தென்பாகம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த முத்து கணேஷ் பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.
எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணிபுரிந்து வந்த பொன்ராஜ் பதவி உயர்வு பெற்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த கிறிஸ்டி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை மதுரை தென் மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க் பிறப்பித்து உள்ளார்


