தூத்துக்குடியில் ஒரே நாளில் 4 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் வந்த ஜெயபிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகிய 3பேரும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய இன்ஸ்பெக்டர் விமலா மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பிறப்பித்துள்ளார். தூத்துக்குடியில் ஒரே நாளில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


