
நன்றி தினகரன்
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த மழையை தென்மாவட்ட மக்கள் மறக்கவே மாட்டார்கள். வரலாறு காணாத பெரு வெள்ளம் அது. இதிலிருந்து மீண்டு வருவதற்கே பல மாதங்கள் பிடித்தன. இந்த வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் இந்நூலாசிரியர் காமராசு செல்வன் ஒரு தொலைக்காட்சி செய்தியாளராக பயணித்த அனுபவமே மாரி எனும் மழை வெள்ளம் என்கிற இந்நூல்.
இதில் வல்லாடு ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம், தூத்துக்குடி திருநெல்வேலி நான்குவழிச்சாலை துண்டிப்பு, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய சம்பவம், அப்போது பயணிகளை மீட்கமுடியாமல் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களை வழங்கியது, பின்னர் கயிறு கட்டி மீட்டது வாழைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது நெல்லை டவுணில் வீடு இடிந்து ஒரு பெண் கதறி அழுதது என அனைத்து சம்பவங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.