முத்தாலங்குறிச்சிக்கு முழுநேர அரசு பேருந்து இயக்கம் . பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் அருகே 6 கிலோ மீட்டரில் உள்ள கிராமம் முத்தாலங்குறிச்சி. இந்த கிராமத்துக்கு தனியார் பேருந்து மூன்று வேளையும் அரசுபேருந்து 5 வேளையும் இயங்கி கொண்டிருந்தது. கொரனா நோய் தோற்று காரணமாக இங்கு வரும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையில் கடந்த வாரம் அனைத்து பகுதியில் பேருந்து இயங்கியும், முத்தாலங்குறிச்சிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்படவில்லை. எனவே இங்கு பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் செய்துங்கநல்லூர் இயங்கி வந்த பேருந்தை இரண்டு தடவை முத்தாலங்குறிச்சிக்கு இயங்கினர். இது போதாது என்றும் முன்பு வந்த 5 தடவை பேருந்து முத்தாலங்குறிச்சிக்கு மட்டும் இயங்காமல் சில தடவை மற்ற ஊர்களுக்கும் இயங்குகிறது. இதனால் பேருந்து குறிப்பிட்ட நேரத்தில் வராது, எனவே முழுநேரமாக முத்தாலங்குறிச்சிக்கு நெல்லை நகரத்தில் இருந்து அரசு டவுண் பஸ் இயங்கவேண்டும் என்று மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் முத்தாலங்குறிச்சிக்கு தினமும் 6 தடவை அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பேருந்து கடந்த திங்கள் கிழமை முதல் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பேருந்து வரும் நேரம் முறையாக குறிப்பிட படவில்லை. எனவே சரியான நேரத்திற்கு முத்தாலங்குறிச்சிக்கு பேருந்து இயக்கவில்லை. எனவே சரியான நேரத்தினை குறிப்பிட்ட அதிகாரிகள் கொடுத்து, அந்தவேளையில் சரியாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளளனர்.


