தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமதிபதி தலைமையில் மனித உரிமைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, அலுவலக மேலாளர் இளங்கோவன் உட்பட அனைத்து அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


